Tuesday, November 26, 2013

115. THE DIARY OF A YOUNG GIRL

What an earth do I have to wear?
I've got no more knickers, my clothes are too tight,
My vest is a loincloth, I'm really a sight!
To put on my shoes I must cut off my toes,
Oh dear, I'm plagued with so many woes!
----------------------------------------------------------------------------------------------------------------------------------
புத்தகம்  The Diary Of a Young Girl
டைரி எழுதியவர்: Anne Frank (http://www.annefrank.org/)
புத்தகமாக்கியவர்: Otto H.Frank and Mirjam Pressler
ஆங்கிலப்படுத்தியவர்: Susan Massotty
வெளியீடு : Penguin Books
பக்கங்கள் : 336
வாங்கிய இடம் : பரிசாகக் கிடைத்தது
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அவர் சுத்தமான‌ சைவ உணவுப்பிரியர். மிருகவதை எதிர்ப்பாளர். மதுவைத் தொடாதவர். புகைக்க மாட்டார். தனக்கென ஒரு குடும்பம் இல்லாமல் பிரம்மச்சாரியாகவே தன்னைத் தன்னாட்டுக்கு அர்ப்பணிக்கும் தேசப்பக்தர். இப்படிப்பட்ட அடையாளங்களுடன் தான் அவர் ஆட்சிக்கு வந்தார். பாதாளத்தில் துவண்டு கிடந்த தனது தேசத்தைச் சில்லாண்டுகளில் அசுர வேகத்தில் வளர வைத்துக் காட்டினார். நவீன தொழில்நுட்பங்களை எல்லாத் துறைகளிலும் புகுத்தினார். எங்கு காணிணும் Development. வரலாறு காணாத வளர்ச்சி. அவரின் ஆட்சித் திறமையை உலகமே மெச்சியது. அவர் திக்கிப் பேசுவதுகூட செய்தியானது. அவர் நடை உடை சிகை ஒப்பனை பாவனைகள் அன்றாட விவாதப் பொருள்களாய் இருந்தன. காலப்போக்கில் நாடு என்ற பொதுச் சொத்தை இனம் என்ற தனிச் சொத்தாக ஆக்கினார். குடிமக்களில் ஒரு சாரார் அமிர்தம் அருந்த, மறு சாராருக்கு ஆலகாலம் கொடுத்தார். ஒரு சாரார் இரட்சகராகப் பார்த்தார்களோ இல்லையோ, மறு சாராருக்குச் சாத்தானாகிப் போனார். வழக்கம் போல் நீங்கள் தவறாக யூகிக்கிறீர்கள். நான் சொல்லும் அவர், அடால்ப் ஹிட்லர்.

இனப் படுகொலைக்குப் பல பரிமாணங்கள் உண்டு. கொன்று செய்யலாம். நம்மூரில் நடப்பது போல், மறைத்து மறந்து செய்யலாம். அரவான் திரைப்படத்தில் வருவது போல, படுத்துச் செய்யலாம். வியட்நாம் போல, விதைத்துச் செய்யலாம். வட மாநிலத்தவர்கள் இங்கு வந்து 90 நாட்களில் தமிழ் பேசும்போது, நாம் இங்கிருந்து கொண்டே ஹிந்தி படிப்பது போல, கற்று செய்யலாம். Structural genocide செய்யலாம். மனிதகுல வரலாற்றின் கொடூர இனப் படுகொலைகளைத் தனது 'நிலமெல்லாம் ரத்தம்' புத்தகத்தில் பட்டியலிடும் பா.ராகவன் அவர்கள், இந்தியாவில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான கொடுமைகளை மூன்றாம் இடத்திலும், கருப்பினத்தவர்களுக்கு எதிரான கொடுமைகளை இரண்டாம் இடத்திலும், யூத இனத்திற்கு எதிரான ஹிட்லரின் கொடுமைகளை முதல் இடத்திலும் வைக்கிறார். அவரால் கொல்லப்பட்ட யூதர்கள் 55 இலட்சம் என்கிறது இணையம். எந்த வல்லரசு அதிபரும் நெருங்க முடியாத எண்ணிக்கை! அவரால் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை, கண்டிப்பாக இந்தியப் பிரிவினைக்கு அடுத்த இடத்தில் இருக்கும்.

இரஷ்ய மன்னர்கள் தங்கள் யூதக் குடிமக்களை ஒட்டுண்ணிகள் என்றார்கள்; கொல்லக் கொல்ல இருக்கும் அவர்களைப் புற்றீசல் என்றார் ஹிட்லர். யூதர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை பெற வேண்டும். தனித்து வாழ வேண்டும். மதப் பள்ளிகள் கூடாது. வரி அதிகம். பட்டப்படிப்பு படிக்க உரிமையில்லை. அரசு வேலை இல்லை. தனித்து அடையாளம் காட்ட மஞ்சள் நிற இடைவார் அணிய வேண்டும். அரசுப் போக்குவர‌த்து வாகனங்கள் அவர்களுக்கானது அல்ல. புதைக்காமல் பிணங்கள் எரிக்கப்பட வேண்டும். இப்படி அரசு சட்டங்கள் மூலம் வெளிப்படையாகவே யூத இனவெறுப்பைக் காட்டியவர் ஹிட்லர். பத்து காசு ஊதிய உயர்வு பெறுவதற்காக பத்து யூதர்களைக் கொன்று கணக்கு காட்டிய அரசாங்க அதிகாரிகள் இருந்ததாக பா.ராகவன் சொல்கிறார். சட்டமாக இல்லாமல் இதுபோன்ற கொடுமைகள் நம்மூரிலும் உண்டென்றாலும், ஹிட்லர் என்ற தனிமனிதனுக்கு மொத்த யூதர்களின் மீதும் ஏன் இப்படி வெறுப்பு? ஒரு தனிப்பட்ட மூளையா இவ்வளவும் செய்தது? ஏன் யூதர்களுக்கு இப்படி ஒரு கொடூர வரலாறு? இப்படி பல கேள்விகளுக்கு விடை தேடும் பயணத்தில், தற்போது இப்புத்தகத்தைக் கடந்திருக்கிறேன்.
(http://imshopping.rediff.com)
Anne Frank. ஆன்னி ஃப்ராங்க். 16 வயதைக் கூட தொடாத இச்சிறுமியைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கிரிக்கெட் அல்லது திரைப்பட நட்சத்திரங்களின் நேற்று பிறந்த பிள்ளைகளைப் போல ஊடகங்கள் அடிக்கடி படமெடுத்து நினைவுபடுத்த, இவள் ஏதோ பிரபலத்தின் பிள்ளையும் இல்லை. சென்ற நூற்றாண்டின் கொடூர பக்கங்களை நினைவுபடுத்தும் இரண்டு சிறுமிகளில் ஒருத்தியாக இன்னும் இருக்கிறாள். (இன்னொருத்தி வியட்நாம் நாடு) ஆன்னியின் யூதக் குடும்பம் நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டாம் நகரில் வாழ்ந்து வந்தது. 12 ஜீன் 1942 வெள்ளி அன்று அவளுக்கு 13ம் பிறந்தநாள். அவளுக்குக் கிடைத்த பரிசுப் பொருள்களில் ஒன்றான டைரிக்கு கிட்டி (Kitty) என்று பெயரிட்டு, தினமும் கிட்டியுடன் பேசுவது போல் எழுதும் பழக்கத்தை ஆரம்பிக்கிறாள். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஜெர்மனி ஆக்கிரமிக்கும் நாடுகளில் இருந்த யூதர்கள் புலம் பெயர்கின்றனர். ஆன்னியின் தந்தை வேலை செய்துவந்த அலுவலகத்தின் இரகசிய அறை ஒன்றில், ஆன்னியின் குடும்பத்தின் நான்கு பேரும், இன்னொரு குடும்பமும் என மொத்தம் எட்டு பேர் பதுங்குகிறார்கள். இரண்டாம் உலகப் போர் முடியும் வரை, ஜெர்மனியின் பிடியில் நெதர்லாந்து இருக்கும்வரை, வெளியே வரமுடியாத நிலை. 1 ஆகஸ்டு 1944 செவ்வாய் வரை, இந்த எட்டு பேரும் அந்த இரகசிய அறையில் தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும், போர் நிலவரச் செய்திகளையும் கொடுத்து வெளியாட்கள் இருவர் உதவுகின்றனர். இக்காலத்தில் கிட்டிக்கு எழுதிய ஆன்னியின் டைரிக் குறிப்புகளே இப்புத்தகம். 'அன்புள்ள டைரிக்கு' என்று ஆளவந்தான் நந்து எழுதுவது போல், 'Dearest Kitty' என்று ஒவ்வொரு முறையும் எழுதுகிறாள் ஆன்னி. 5 admirers on every street corner, 20 or so friends, the favourite of most of the teachers, bags full of sweets and load of pocket money என்று சுற்றித் திரிந்த ஆன்னியின், முதல் டைரிக் குறிப்பு இது: 12 ஜீன் 1942 - I hope I will be able to confide everything to you, as I have never been able to confide in anyone, and I hope you will be a great source of comfort and support. தனது உணர்வுகளைப் பதிவு செய்யவும், இரகசியங்களைப் பகிரவும் ஒரு டைரியைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமாக இப்படி சொல்கிறாள்: Paper is more patient than people. வெளியில் இருக்கும் யூதக் குழந்தைகளை விட பாதுகாப்பாகவும், அவர்களை விட பெருந்துயரத்திலும் இருப்பதை on the top of the world and in the depth of despair என்கிறாள். திருடர்களால் அல்லது நாசிகளால் ஒருவேளை கண்டுபிடிக்கப்பட்டால், எந்தெந்தப் பொருட்களை என்னவெல்லாம் செய்வார்கள் என மூத்தவர்கள் பேசிக் கொள்ளும் போது, Oh, not my diary; if my diary goes; I go too! என்று பதறுகிறாள். புதன் 5 ஏப்ரல் 1944 அன்று சொல்கிறாள்: if I don't have the talent to write books or newspaper articles, I can always write for myself. But I want to achieve more than that. I can't imagine living like Mother, .... and all the women who go about their work and are then forgotten. I need to have something besides a husband and children to devote myself to! I don't want to have lived in vain like most people, even those I've never met. I want to be useful or bring enjoyment to all people, even those I've never met. I want to go on living even after my death! And that's why I'm so grateful to God for having given me this gift, which I can use to develop myself and to express all that's inside me! இப்படியாக‌ ஆன்னி என்ற அந்தச் சிறுமிக்குக் கிட்டிதான் எல்லாமுமாக இருந்திருக்கிறது என்பதைப் புத்தகம் முழுவதும் உணர முடியும் என்றாலும், அவளுக்கு மறுக்கப்பட்ட வாழ்க்கையையும், அவளின் மழலையையும் ஒருசேர உணர்த்தும் இவ்வரிகள் என்னை மிகவும் பாதித்தன‌: புதன் 3 மே 1944 - I hadn't had my period for more than two months, but it finally started last Sunday. Despite the mess and bother, I'm glad it hasn't deserted me.
(http://www.annefrank.org/ மேல் இரண்டு தளங்களும் உப்பரிகையும் தான் அந்த எட்டு பேர் பதுங்கியிருந்த இடங்கள். பின்புறத் தோற்றமிது)
விடுபட்டுப் போன பள்ளிப்படிப்பைப் பற்றி எழுதுகிறாள். பொழுதுபோக்குகள் சொல்கிறாள். அந்த மறைவிடத்திலும் தனது படிப்பையும் பொழுதுபோக்குகளையும் தொடர்கிறாள். இரகசிய அறையில் இருக்கும் மற்றவர்களைப் பற்றியும் சொல்கிறாள். தனது பெற்றோருடன் இருக்கும் மனவருத்தங்களை எழுதுகிறாள். ஒரு A ஜோக் கூட சொல்கிறாள். இரண்டு வருடத்திற்குள் போர் முடிந்து மீண்டும் பள்ளியில் சேராவிடில், அதன்பிறகு பள்ளிக்குச் செல்வது வீண் என வருந்துகிறாள். உடன் இருக்கும் இன்னொரு குடும்பத்தின் பீட்டர் உடனான காதல் போன்ற ஒரு மயக்கத்தையும் சொல்கிறாள். நூலகத்தில் இருந்து கிடைக்கும் புத்தகங்கள் பற்றி எழுதுகிறாள். செத்தாலும் கெடுக்கக் கூடாதென, தங்களின் அன்றாடத் தேவைகளுக்கு உதவும் வெளியாட்கள் இருவரின் பெயர்களைத் தவிர எல்லாவற்றையும் எழுதுகிறாள். தலை சீவும் சீப்பின் பற்கள் 10 தான் மிஞ்சுகின்றன. போர் முடியவில்லை. Nothing worse than being caught என்று மறைந்தே வாழ்கிறார்கள். செவ்வாய் 1 ஆகஸ்டு 1944 அன்று டைரி முடிகிறது. மூன்று நாட்கள் கழித்து, அந்த இரகசிய அறையில் இருந்து அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதன் பிறகு ஆன்னி என்னவானாள்? விக்கிபீடியா சொல்கிறது: With the other females not selected for immediate death, Frank was forced to strip naked to be disinfected, had her head shaved and was tattooed with an identifying number on her arm. அதன் பிறகு, 1945ம் வருட ஆரம்பத்தில் நாசிகளின் முகாமில் (concentration camp) கொள்ளை நோயில் தனது அக்காளுடன் ஆன்னி இறந்து போனாள். அந்த எட்டு பேரில், ஆன்னியின் தந்தை (
Otto H.Frank) மட்டுமே தப்பித்து பிழைக்கிறார். பிற்காலத்தில் தனது மகள் டச்சு மொழியில் எழுதிய டைரியைப் புத்தகமாக தொகுக்கிறார். பல பதிப்பகங்கள் நிராகரிக்கின்றன. போர்க் காலத்தில் எழுதப்பட்ட கடிதங்கள் புத்தகங்கள் டைரிகள் என எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்தாலும் ஒரு சிறுமியால் சொல்லப்பட்டதால், 70 வருடங்களுக்கு மேலாகத் தனித்துத் தெரிகிறது இப்புத்தகம். அவள் நாசிகளின் யூதப் படுகொலைகளின் நினைவுச் சின்னமாக இன்றும் நினைவில் வைக்கப்படுகிறாள். சில தலைப்புகளில் சிறந்த 100 பேரின் பெயரை வெளியிடும் டைம் இதழ், சென்ற நூற்றாண்டு முழுவதற்குமான‌ பட்டியல் ஒன்றில் இவள் பெயரையும் எழுதியது. இன்னொரு பட்டியலில் ஹிட்லர்!
ஹிட்லரின் தனிப்பட்ட மூளையா இப்படி செய்தது என்ற எனது கேள்விக்கு, என்னைப் போலவே ஆன்னியிடம் ஒரு பதில் இருக்கிறது: I don't believe the war is simply the work of politicians and capitalists. Oh no, the common man is very bit as guilty; otherwise, people and nations would have rebelled long ago! There's a destructive urge in people, the urge to rage, murder and kill. And until all of humanity, without exception, undergoes a metamorphosis, wars will continue to be waged, and everything that has been carefully built up, cultivated and grown will be cut down and destroyed, only to start all over again!

திங்கள் 22 மே 1944 - What one Christian does is his own responsibility, what one Jew does reflects on all Jews என்றும், oppressed unfortunate pitiful என்றும் யூதர்களின் நிலையைச் சொல்கிறாள். மூன்று நாட்கள் கழித்து The most decent people are being sent to concentration camps, prisons and lonely cells, while the lowest of the low rule over young and old, rich and poor என எழுதுகிறாள். இது போன்ற சில கருத்துகள், உண்மையிலேயே இந்த டைரிக் குறிப்புகள் ஒரு சிறுமியால் எழுதப்பட்டவையா என்ற சந்தேகத்தை உண்டாக்கின. இதுபோல ஏராளமான உதாரணங்கள் உண்டு. தவிர தாயுடன் சரியான இணக்கம் இல்லாததால், தனது உடல் மாற்றங்களையும், இன்னொரு பெண் மற்றும் ஆண் உடல் மேல் ஏற்படும் ஆர்வத்தையும் கிளர்ச்சியையும் ஆன்னி அப்படியே எழுதிய சில குறிப்புகள் உள்ளன. இதுபோன்ற சில காரணங்களுக்காக பல காலக்கட்டங்க‌ளில் பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்திருக்கிறது இப்புத்தகம். பெண்ணுறுப்பு பற்றி விவரணைகளையும், ஒருபால் கவர்ச்சி பற்றிய கருத்துகளையும் பாடப் புத்தகங்களில் இருந்து ஜெர்மன் அரசு நீக்கியதாகவும் படித்தேன். 

ஒரு வீட்டிற்குள் நடக்கும் டைரிக் குறிப்புகள் என்பதால் பரபரப்பு திருப்பங்கள், அப்போதைய அரசியல் மற்றும் போர் தகவல்களை எதிர்பார்க்க முடியாது எனினும், இனவெறுப்பின் சாட்சியமாய் இருக்கும் இப்புத்தகம் கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டும்.

அனுபந்தம்:
-------------------
1. எனக்கென்று ஒரேயொரு உயிர்நண்பன் இருந்தான், இருக்கிறான். அவனைப் பிரிந்த ஒரு தருணத்தில் 7 ஆண்டுகளுக்கு முன் இப்புத்தகத்தை அவனுக்குப் பரிசளித்தேன். அப்போது நான் படித்திருக்கவில்லை. இப்போது அவன் படித்திருப்பானா என்றும் தெரியவில்லை. இன்னொரு நண்பன் பரிசளித்து நான் படிக்க வேண்டும் என இருந்திருக்கிறது. பாரீஸ் நகர‌ நவநாகரீக சாதனங்கள், வாசனை திரவியங்கள், கடிகாரங்கள், தைக்கப்பட்ட ஆடைகள் என ஏதோ ஒன்றைப் பரிசளித்து என்னைச் சங்கடப்படுத்தாமல், இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து இதனை என்கண் விட்ட என் நண்பன் சதீஷ் குமாருக்கு நன்றிகள்.

- ஞானசேகர்
(http://jssekar.blogspot.in/)