என்னை அறியாமல் என்னைத் தொற்றிக்கொண்ட ஒரு நல்ல பழக்கம், புத்தகம் படிப்பது. கொஞ்சம் வறட்சியாய்ப் போன வாழ்க்கையை நடதிக்கொண்டிருக்கும்போது நல்ல துணையாக அமைந்திருக்கும் இந்தப் புத்தகங்கள். சின்ன வயதில் உருவான இந்தப் பழக்கத்திற்கு இப்போது நன்றி சொல்கிறேன்.
இந்த வலைப்பூ, நான் படித்த புத்தகங்களையும், அவற்றுடனான என் அனுபவங்களையும், அவற்றைப் படிக்கும்போது, படித்தபின் நேர்ந்த அனுபவங்களையும் பற்றிச் சொல்லக் கிடைத்த நல்ல வாய்ப்பாக இருக்கட்டும்.
1 comment:
போன நூற்றாண்டில், இப்பூமி தாங்கிய முரண்பாடான மனிதர்களில் முதல் மூன்று இடத்திற்குள் இருப்பார், எனது அபிமான பெர்னார்ட் ஷா. மிகச் சிறந்த எழுத்தாளரான இவர், ஒரு முறை சொன்னார் : "படிக்கத் தெரிந்தவன் படித்தே நேரத்தை வீணாக்கும், ஒன்றுக்கும் உதவாதவன்". இவ்வார்த்தைகள் முழுக்க முழுக்க இவர் செய்யும் தொழிலுக்கே முரண்பாடாய்த் தோன்றினாலும், இதன் உண்மை அர்த்தம் புரிய எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆகின.(சத்தியமா நானா கண்டுபுடிச்சேன்)இவ்வார்த்தைகள் எந்த அளவுக்கு உண்மை என்பது, புத்தகப் பிரியர்களுக்குப் புரியும்.
http://jssekar.blogspot.com/2005/11/blog-post_29.html
ஒரு விஷயத்தைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டு இருந்தாலும், உண்மையானதையும், உபயோகமானதையும் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான விஷயம். நான் பட்ட சிலபல கஷ்டங்கள் சொன்னால், நம்ம சேரன் இப்பின்னூட்டத்தை அனுமதிக்க மாட்டார்.
நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தி, "ஒன்றுக்கும் உதவாத" என்னைப் போன்ற புத்தகப் பிரியர்களுக்கு வழிகாட்டுங்கள் சேரன்.
-ஞானசேகர்
Post a Comment